எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றில் முன்வைத்துள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு
மிஹிந்தலை - ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09.12.2023) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
இராணுவத்தில் இருப்பதாக கூறிக்கொண்ட இருவர் கடந்த 3 வாரங்களாக அந்த புனித ஸ்தலத்தில் இருந்த போது, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விகாராதிபதி தேரர் கருதுகின்றார். எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும்.
கட்சி பேதமின்றி விகாராதிபதியின் வாழ்க்கை தொடர்பான பொறுப்பு இருக்கின்றது, நாட்டில் நடக்கும் தவறுகளை கட்சி வேறுபாடின்றி அவர் விமர்சித்து வந்தாலும் அவற்றைத் தாங்கிக்கொள்வது நமது கடமை என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை மிஹிந்தலை புனித தலத்தின் பாதுகாப்பு மற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எவருக்கும் இந்த அடையாளம் காணப்பட்ட நபர்கள் குறித்து தெரியாது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri