கடன் வசதிகள் இடை நிறுத்தம்! மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை - வழங்கப்பட்டுள்ள அனுமதி
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க >>> பொதுமக்கள் மிகுந்த அவதானம்! ஏழு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
2. உலக பல்கலைக்கழகங்களின் 'வெபோமெட்ரிக்ஸ்' தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதற்கமைய, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், பேராதனை பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும், மொரட்டுவ பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.
மேலும் படிக்க >>> உலக தரவரிசையில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்
3. புதிய பதிவுகளுக்காக தேசிய எரிபொருள் அனுமதி அட்டையின் QR அமைப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது முதல் புதிய வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க >>> தேசிய எரிபொருள் அனுமதி அட்டை! மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை
4. இலங்கை அரசாங்கம் கடன்களை மீளச் செலுத்த முடியாது என்று அறிவித்தமையால் சீனா மற்றும் ஜப்பான் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு அபிவிருத்தித் திட்டங்களை இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்துக்குத் தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை சீன அரசாங்கத்துக்கு சொந்தமான எக்ஸிம் வங்கி இலங்கைக்கு வழங்க இணங்கியிருந்தது.தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> இலங்கைக்கான கடன் வசதிகள் இடை நிறுத்தம்! கைவிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள்
5. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணைக்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க >>> ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிப்பு
6. 2022 ஆகஸ்ட் 5ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடையை இலங்கையின் நிதி அமைச்சகம் நீக்கியுள்ளது.
நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்ட வர்த்தமானியின் அடிப்படையில் தடைப்பட்டியலில் இருந்து கிளைபோசெட் நீக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> கோட்டாபய பிறப்பித்த இறக்குமதி தடையை நீக்கிய ரணில்! நிதி அமைச்சராக ஜனாதிபதி கையொப்பம்
7. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு உலகில் எந்த நாடும் அரசியல் புகலிடம் வழங்க இதுவரை முன்வரவில்லை என தெரியவருகிறது.
மேலும் படிக்க >>> கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள்
8. இலங்கையில் மேலும் பல எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு (LIOC) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறக்க அனுமதி கிடைத்துள்ளதாக LIOC நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.
மேலும் படிக்க >>> ஐஓசி எரிபொருள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
9. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரித்துள்ள வலையில் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ், முஸ்லிம் மக்கள் வழங்கிய ஆணைக்கு அவர்கள் துரோகம் செய்யக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>> ரணில் விரித்துள்ள வலை! தமிழ்க் கட்சிகளுக்கு சரத் பொன்சேகா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
10. எரிவாயுவின் விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது.
மேலும் படிக்க >>> நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலையை குறைத்தது லிட்ரோ