அமைச்சருக்கு எதிராக உயர் பொலிஸ் அதிகாரிகள் போர்கொடி
சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்ற உத்தரவினை சில சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நிராகரித்துள்ளனர்.
இடமாற்ற உத்தரவை நிராகரிப்பதாக அறிவிப்பு
தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தனக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவினை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

இடமாற்ற உத்தரவினை பிறப்பிக்கும் அதிகாரம் பொதுப் பாதுகாப்பு அமைச்சிற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இடமாற்ற உத்தரவினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஏழு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்றுக் கொள்ள மறுப்பு
இதேவேளை, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரியவும் தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்ற உத்தரவினை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு ஆகிய தரப்புக்கள் இடமாற்ற உத்தரவினை பிறப்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடமாற்றத்திற்கான தெளிவான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இடமாற்ற உத்தரவினை ரத்து செய்யுமாறு அவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam