Reecha தொடர்பில் மற்றுமொரு பொதுமகன் வெளியிட்டுள்ள புதிய காணொளி!
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா(Reecha) ஒருங்கிணைந்த பண்ணை பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களை கொண்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடனும் இந்த ஒருங்கிணைந்த பண்ணை அமைந்துள்ளது.
இந்தநிலையில் அண்மையில் றீச்சாவிற்கு வருகை தந்த தன்னை சூழலியலாளர் என்று அறிமுகப்படுத்திய ஒருவர் வெளியிட்ட காணொளியானது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதன் உண்மைதன்மை பற்றி ஆராய்ந்து றீச்சா பண்ணையில் சிசிரிவியில் சிக்கிய காணொளியொன்றும் வெளியாகியது.
இதன்போது றீச்சாவிற்கு வருகை தந்து, தன்னை சூழலியலாளர் என்று அறிமுகப்படுத்திய நபர்,வெளியில் குறைந்த விலைக்கு விற்கப்படும் பொருட்கள் றீச்சாவில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறி றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மற்றுமொரு பொதுமகன் றீச்சாவிற்கு சென்று, அங்குள்ள அங்காடியில் காணப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் விலை தொடர்பிலும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலும் நேரடியாக காணொளி ஒன்றை பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொளியை இங்கு முழுமையாக காணலாம்...,




