யாழில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மருத்துவ பராமரிப்பு சேவை திட்டம்
யாழ்.மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தை மாதம் 18ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு முதல் வீட்டிலிருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு வீட்டில் மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அச்செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடுகையில்,
வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு இச்சேவை மூலம் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
இத்திட்டமானது பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகள் மூலம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இவ்விசேட பராமரிப்பு தேவையானவர்கள் தமக்கு அருகில் உள்ள மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றிற்குரிய கீழே வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்குக் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 வரை அழைப்பதன் மூலம் தமக்கு வழங்கப்பட வேண்டிய பராமரிப்பினை முன்பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின் அவ்வைத்தியசாலையிலிருந்து மருத்துவ பராமரிப்பு குழுவினர் நோயாளியின் வீட்டிற்கு வருகை தந்து அவர்களுடைய நோய் நிலைமையை ஆராய்ந்து வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பினை வழங்குவார்கள்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - 021 226 3262
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை - 021 205 9227
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை - 021 227 1150
ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை - 021 221 1660
இச்சேவை மூலம் அவசர மருத்துவ சேவைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. இச்சேவை மூலம் அவசர தேவைகள் அற்ற பராமரிப்பு மட்டுமே வழங்கப்படும். (உதாரணமாக - உணவு வழங்கும் குழாய், சிறுநீர் குழாய் மாற்றுதல், மருந்து கட்டுதல், வீட்டில் வழங்கக்கூடிய இயன் மருத்துவ சேவைகள் போன்றவை)
அவ்வாறு அந்நோயாளிகளுக்கு அவசர மருத்துவ தேவைகள் ஏற்படின் 1990 அவசர அம்புலன்ஸ் சேவையை அழைப்பதன் மூலம் வைத்தியசாலைக்குச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்... அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி News Lankasri

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri

காமெடி நடிகர் செந்திலின் மகனா இது... என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? திடீரென்று அடித்த அதிர்ஷ்டம் Manithan

சனி வக்ர நிலை முடிவு - ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார் ? இந்த 2 ராசிக்கும் இனி நல்ல காலம் பொறந்திருச்சு Manithan
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022