தொடருந்தில் மீட்கப்பட்ட குழந்தை! பெற்றோருக்கு திருமணம்: நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனகயா தொடருந்தில், சிசுவை கைவிட்டுச் சென்ற பெற்றோரிடமே குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
கொழும்பு - கோட்டை நீதவான திலின கமகே, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இன்று இந்த உத்தரவை இட்டுள்ளார்.
பெற்றோர்களுக்கு திருமணம்
பிணை வழங்கப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்களான இளம் தம்பதியினருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதன் பின்னர் குழந்தையை கவனித்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி லக்ஷான் டயஸ் தெரிவித்த விடயங்களை கவனத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
டி.என்.ஏ அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக குழந்தை மற்றும் சந்தேகநபர்களை எதிர்வரும் 21ம் திகதி அரசு பரிசோதகர் முன்னிலையில் முற்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
