தொடருந்தில் குழந்தையை கைவிட்ட பெற்றோர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்தின் கழிவறையில் கைக் குழந்தை ஒன்றை கைவிட்டுச் சென்ற குழந்தையின் பெற்றோரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாய் வழங்கிய வாக்குமூலம்
நேற்று முன்தினம் இரவு, கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் மட்டக்களப்பு நோக்கி பயணிப்பதற்கு தயாராக நிறுது்தி வைக்கப்பட்டிருந்த மீனகயா தொடருந்தில் குறித்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அதன் பின்னர், குழந்தையை கைவிட்டுச் சென்ற 26 வயதுடைய பெற்றோர்களான தம்பதியர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும், குழந்தையை கண்டெடுப்பவர்கள் பாதுகாப்பாக குழந்தையை வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் குழந்தையை கைவிட்டுச் சென்றதாக கைது செய்யப்பட்ட குழந்தையின் தாயார் பொலிஸாரிடத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
