முதலாவது டெஸ்ட் உலக கிண்ணத்தை கைப்பற்றியது நியூசிலாந்து!
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடாத்தப்படும் முதலாவது உலகக்கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸிப் தொடரில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான குறித்த போட்டி இங்கிலாந்தின் சவுத்ஹெம்ப்டனில் இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 170 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.
நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 249 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. போட்டியில் தொடர்ச்சியாக மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை 6 ஆவது நாளாகவும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதனை அடுத்து போட்டியின் இறுதி நாளான இன்று நியூசிலாந்து அணிக்கு 139 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
