ஆறுதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி
இலங்கை (Sri Lanka) மற்றும் நியூசிலாந்து (New Zealand) அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
8 விக்கெட்டுக்களை இழந்து 290 ஓட்டங்கள்
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பதும் நிஸ்ஸங்க (Pathum Nissanka) அதிகபட்சமாக 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 53 ஓட்டங்களையும் மற்றும் கமிந்து மென்டிஸ் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி
அதன்படி, 291 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பில் மார்க் சாப்மேன் (Mark Chapman) அதிகபட்சமாக 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அசித பெர்ணான்டோ, மஹீஷ் தீக்ஷன மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |