நியூஸிலாந்தின் புதிய பருவகால விசாக்கள் அறிவிப்பு! இலங்கை, இந்தியர்களுக்கு வாய்ப்பு
நியூஸிலாந்தில் இரண்டு புதிய பருவகால விசா வகைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விசாக்களுக்கு இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக் காலங்களில் அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த அறிவிப்பினை நியூஸிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பருவகால விசா
உலகளாவிய தொழிலாளர் பருவகால விசா, உச்ச பருவகால விசா ஆகிய இரண்டு புதிய விசா வகைகளும் அங்கீகாரம் பெற்ற AEWV என்ற விசா கட்டமைப்பின் கீழ் செயல்படும்.

நியூஸிலாந்து குடிவரவுத் திணைக்கள தகவலுக்கமைய, முக்கியத் தொழில்களில் அதிக பருவகாலத் தேவை உள்ள காலங்களில், அங்கீகாரம் பெற்ற தொழில் வழங்குநர்களுக்கு தற்காலிகமாக ஏற்படும் பணியாளர் இடைவெளிகளை நிரப்ப இந்த விசாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய விசா பிரிவுகளுக்கான வேலை சோதனைகள் மற்றும் விசா விண்ணப்ப நடைமுறைகள் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam