நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக புகையிலைக்கு தடை
நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக புகையிலைக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிகரெட் மற்றும் புகையிலை
இந்தநிலையில் 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த எவரும், சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை வாங்க முடியாது என்று சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை வாங்கக்கூடியவர்களின் எண்ணிக்கை குறையும். அத்துடன் 2050ல், 40 வயது நிரம்பியவர்கள் சிகரெட் வாங்க முடியாத அளவில் இருப்பார்கள்.
இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்திய சுகாதார அமைச்சர் ஆயிஷா வெரால் நாடாளுமன்றில் உரையாற்றியபோது, இது புகை இல்லாத எதிர்காலத்தை நோக்கிய ஒரு படி என்று குறிப்பிட்டுள்ளார்.
புகைபிடிக்கும் வீதம் மிகக் குறைவு
ஏற்கனவே நியூசிலாந்தின் புகைபிடிக்கும் வீதம் ஏற்கனவே வரலாற்றில் மிகக் குறைந்த நிலையில் உள்ளது,
நவம்பரில் வெளியிடப்பட்ட அரசாங்க புள்ளிவிவரத்தின்படி, வயது வந்தவர்களில் வெறும் 8 வீதத்தினர் மட்டுமே தினசரி புகைபிடிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு இது 9.4 வீதமாக இருந்தது.
இந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டளவில் 5 வீதமாகக் குறையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
