இலங்கைக்கான தனது நிதி உதவியை அதிகரிப்பதற்கு உறுதிபூண்டுள்ள நாடு
நியூசிலாந்தின் பிரதி பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதன்போது, நியூஸிலாந்தின் அமைச்சர், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தினார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீண்டகால வளர்ச்சி
இலங்கையின் தற்போதைய பாதையை, நிலையான மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கான ஒரு நம்பிக்கைக்குரிய அடித்தளமாக நியூசிலாந்து அங்கீகரிக்கிறது என்று பீட்டர்ஸ் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இந்த சூழலில், நியூசிலாந்து அரசாங்கம், எதிர்காலத்தில் இலங்கைக்கான தனது நிதி உதவியை ஆழப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை
இதேவேளை பிளவுகள் நீண்டகால மோதலுக்கு வழிவகுத்தன என்பதை இதன்போது குறிப்பிட்ட இலங்கையின் ஜனாதிபதி, நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
நல்லிணக்கச் செயல்முறையின் முக்கிய தூண்களாக அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய ஒற்றுமையை தனது அரசாங்கம் முன்னுரிமைப்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



