நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய தூதுவர்கள் யாழ்.பலாலி விமான நிலையத்திற்கு விஜயம்
யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளின் தூதுவர்கள், இன்று(27.10.2026) பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைப் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
நேற்று(26.10.2026) தனித்தனியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இவ்விரு நாடுகளின் தூதுவர்களும், தமது விஜயத்தின் முதற்கட்டமாக காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டமையுடன், அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
நேரில் சென்று ஆய்வு
அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறை கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணப் பொலிஸ் உயர் அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இவ்வாறான முக்கிய சந்திப்புகளை நிறைவு செய்த நிலையிலேயே, தூதுவர்கள் இருவரும் இன்று பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு, அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.






