இந்தியாவின் பணம் கிடைத்தால் மாத்திரமே புத்தாண்டு கொண்டாட்டம்
இலங்கைக்கு தேவையான உணவு பொருட்கள் உட்பட அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கும் ஆயிரம் மில்லியன் டொலர் கடன் சரியான முறையில் கிடைக்கும் வரை தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது என அத்தியவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்த கடனுதவி கிடைக்கவில்லை என்றால், உணவு பொருட்களை இறக்குமதி செய்ய மாற்று வழிகள் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே அத்தியவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன. டொலர் இல்லாத காரணத்தினால், அவற்றில் உள்ள பொருட்களை இறக்க முடியாதுள்ளது.
இந்தியாவிடம் இருந்து கடனுதவி கிடைத்தாலும் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து, இறக்குவதற்கு நீண்டகாலம் செல்லும். சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டால், பண்டிகை காலத்தில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri