பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் மிகவும் சிறிய வடிவிலான புதிய விலங்கினம் கண்டுபிடிப்பு
பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் மிகவும் சிறிய வடிவிலான புதிய காட்டுப்பூனை இனம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் முறைப்படி கண்டறிந்து பெயரிட்டுள்ளனர்.
கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், புதிய உயிருள்ள பூனை இனம் ஒன்று முறைப்படி கண்டறியப்பட்டு பெயரிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.
உள்ளூர் மக்களால் 'டில்காயோ' என அழைக்கப்படும் இப்பூனைக்கு 'லியோபார்டஸ் டில்காயோ' (Leopardus tilcayo) என ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானப் பெயரிட்டுள்ளனர்.
அபூர்வப் பூனை
பொலிவியாவின் மேக மூட்டம் நிறைந்த யுங்காஸ் காட்டுப் பகுதியில் வாழும் இது, சாதாரண வீட்டுப் பூனையை விட சிறியதுடன், சுமார் 1.4 கிலோகிராம் எடையும், 46 சென்டிமீட்டர் நீளமும் கொண்டது.

வெளிர் பழுப்பு நிற உடலின் மீது ஒழுங்கற்ற புள்ளிகளைக் கொண்டுள்ள இப்பூனைகள், இரவில் தீவிரமாக இயங்கக்கூடியவை என்றும், சிறிய எலிகளை உணவாகக் கொள்ளக்கூடியவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த அபூர்வப் பூனை இனம் அழியும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள விலங்குகளின் பட்டியலில் சேரக்கூடும் என்பதால், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமென சூழலியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.