உள்ளூராட்சி தேர்தலில் பெருமளவான புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி
உள்ளூராட்சி தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும்,
கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தகுதி பெற்ற வாக்காளர்களுக்கு மேலதிகமாக இந்தப் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு
புதிய வாக்காளர்கள் 2024 அக்டோபர் 1 மற்றும் 2025 பெப்ரவரி 1 ஆகிய திகதிகளில் சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்காக மொத்தம் 1,729,330 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மேலதிகமாக தேர்தலுக்கான தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளை (2025.03.12) முடிவடையும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உக்ரைனுக்காக தீவிரம்... பிரித்தானியா உலகின் மிகப்பெரிய போர் வெறியர் என கொந்தளிக்கும் ரஷ்யா News Lankasri
