விலைகளில் மாற்றமா..! சற்று முன் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்திலும் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமின்றி தொடர்ந்திருந்தன.
விலை நிலவரம்
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3690 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1482 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் காணப்படுகிறது.
இதுவேளை மார்ச் மாதத்திற்காக மொத்தம் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் ஆர்டர் செய்துள்ளது.
இதில், 7800 மெட்ரிக் தொன் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 15 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri