திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் ஈரான் போர்க்கப்பல்: காரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஐரிஸ் புசேஹெரின் என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில், மீட்கப்படாத ஏனையவர்களும் உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு அழைத்துவரப்படுவதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலில் இருந்து 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு, பின் வெலிசரை கடற்படை தளத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
இந்திய ஊடகத்தின் தகவல்
இதேவேளை கொழும்பு துறைமுகம் வணிக ரீதியாக முக்கியமானது என்பதால், பாதுகாப்புக் கருதி இந்தக் கப்பலை இலங்கையின் வடகிழக்கில் உள்ள திருகோணமலை துறைமுகத்திற்கு இலங்கை கடற்படை கொண்டு செல்வதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த கப்பலின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், அது நடுக்கடலில் தவித்ததாகவும், ஈரானின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் கடந்த மார்ச் 4 ஆம் திகதி தாக்கப்பட்டதால், இந்தக் கப்பலும் இலக்காகக்கூடும் என்ற அச்சத்தில் இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ஐரிஸ் புசேஹெரின் கப்பலில் இருந்த 53 அதிகாரிகள், 84 பயிற்சி அதிகாரிகள், 48 மூத்த மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் என மொத்தம் 208 வீரர்களை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டது எனவும் குறித்த இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
தனது தம்பிகளால் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam