சம்பந்தனை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்!
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியின் அவசியம் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதித்ததாக ஜூலி சுங் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
"ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் இலங்கையின் பல்வேறு சமூகங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி பற்றிய கூடுதல் உரையாடல்களை எதிர்நோக்குகிறோம்," என்று அவர் கூறினார்.
இதேவேளை, இந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் அமெரிக்க தூதுவர் சந்தித்தார், அங்கு அவர்கள் துடிப்பான ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் இன்றியமையாத பங்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய, ஜனநாயக மற்றும் இறையாண்மை கொண்ட இலங்கையின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர்.
அவர் இலங்கை மற்றும் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பதற்கான சாத்தியமான பகுதிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சாய்பியை சந்தித்தார்.
Discussed the need for a political solution, accountability & justice for all Sri Lankans with R. Sampanthan, Leader of @TNAMediaOffice. Looking forward to more conversations on #democratic governance, #humanrights & inclusive economic growth for all of ??’s diverse communities. pic.twitter.com/cgYpynPfKC
— Ambassador Julie Chung (@USAmbSL) March 8, 2022

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
