27 நாடுகளில் பரவும் புதிய வகை கோவிட் தொற்று
புதிய வகை எக்ஸ்.இ.சி (XEC Covid) கோவிட் திரிபு தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போலந்து, நோர்வே, லக்சம்பேர்க், உக்ரைன், போர்த்துக்கல், சீனா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் ஒரே ரகம் இருப்பது தெரியவந்துள்ளது.
தடுப்பூசிகள் பயன்பாடு
கடந்த ஜூன் மாதம் ஜேர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி எனும் கோவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரித்தானியா, அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர் காலத்தில் வேகமாகப் பரவத்தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த வைரஸ் கொண்டிருப்பதாகவும் தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்தத் திரிபால் மனிதர்களுக்குத் தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |