கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு பெயர் சூட்டப்பட்டது!
டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய கொவிட் வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளநிலையில் அதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பெயரை சூட்டியுள்ளது.
இதன்படி அந்த வைரஸிற்கு Omicron என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கதுடன் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த புதிய திரிபுடன் தென்னாபிரிக்கா, ஹொங்கொங் மற்றும் பொத்ஸ்வானா முதலான நாடுகளில் 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தென்னாப்பிரிக்கா நாட்டில் புதிதாக உருவெடுத்து இருக்கும் B1.1.529 ரக வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.
இந்தக் கூட்டத்தில் புதிய ரக வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த புதிய வகை வைரஸுக்கு ஏகப்பட்ட திரிபு நிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
புதிய ரக வைரஸ் எவ்வாறு திரிந்து பரவுகிறது என்பதைப் பொறுத்தே இதன் தன்மை விஞ்ஞானிகளால் கண்டறியப்படும். தென்னாபிரிக்காவில் குறைவான முன் களப்பணியாளர்களுக்கு மட்டுமே 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தை அடுத்து அடுத்த வாரமும் உலக சுகாதார அமைப்பின் முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளனர். அதே சமயத்தில் இந்த புதிய ரக வைரஸ் தாக்கத்தைக் கண்டறியும்வரை மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிட வேண்டாம் என்று உலக சுகாதார விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
