ரணில் முன்னிலையில் இன்று மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் சத்தியப்பிரமாணம் (Photos)
மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம்
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை கடந்த 8ஆம் திகதி 37 இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

டி.வி.சானக்கவிற்கு வழங்கப்பட்ட பதவி
மேலும் பதவிப்பிரமாணம் செய்து ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அதற்கமைய, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்கவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்திருந்ததாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri