அமைச்சு பதவியை பொறுப்பேற்று ஒரு மணித்தியாலத்தில் பதவியை நிராகரித்த உறுப்பினர்
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
பதவியை நிராகரித்த உறுப்பினர்
அதற்கமைய, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்கவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்தவும் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகர செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 1 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
