அம்பாறை மாவட்ட புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக டி.பி.எச். கலனசிறி பதவியேற்பு
அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி இன்று (07) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
அனைத்து மதத் தலைவர்களின் ஆசிர்வாதத்தின் கீழ் சுப நேரத்தில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பதவியேற்பு
அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் சனத் அமரசிங்க கம்பஹா மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பண்டாரவளைப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி அம்பாறை மாவட்டத்தின் 31வது பொலிஸ் அத்தியட்சகராக டி.பி.எச். கலனசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், அம்பாறை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட அம்பாறை மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
