கந்தளாய் குளத்தில் மீன்பிடிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு
கந்தளாய் குளத்தில் மீன்பிடிக்க சென்றபோது காணாமல் போன நபரின் சடலம் இன்று (07) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுசஞ்சய குமார (வயது 46) என்ற இவர் கந்தளாய் பலுகஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் இரண்டு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நேற்று முன்தினம் தனது இரண்டு நண்பர்களுடன் மீன்பிடிக்கக் கந்தளாய் குளத்தில் படகில் சென்றிருந்த இவர், நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தனியாகவே இருந்துள்ளார்
பின்னர், மற்ற இருவர் கரைக்கு வந்து விட்ட நிலையில், மதுசஞ்சய திரும்பவில்லை.
இவரது உறவினர்கள் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை அடுத்து, தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று அதிகாலை அப்பகுதிக்கு சென்றவர்கள் பத்திநியம்மான் கோவிலுக்கு பின்னால் கரையொதுங்கிய அவரது சடலத்தை கண்டதையடுத்து, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
அக்போபுர பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
