ரணிலின் கைது ஒரு நாடகம்! எதிர்ப்பு வெளியிட்டுள்ள முன்னிலை சோஷலிசக் கட்சி
நாட்டில் நடந்த பெரும் குற்றச் சம்பவங்கள் மூன்றில் பெயர் குறிப்பிட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விசாரணைக்கு உட்படுத்தி கைது செய்யாமல் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்கு செல்வதற்கு அரசாங்க நிதியை பயன்படுத்திய குற்றத்திற்கு கைது செய்தது அரசாங்கத்தின் ஒரு நாடகமாகும் என முன்னிலை சோஷலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
ரணிலின் கைதினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்,
தேவையற்ற குற்றச்சாட்டு
நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேர்தல் மேடைகளில் மகிந்த ஆட்சியில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக இருந்த ஜொன்ஸ்டன் பிரனாந்து பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் ஐந்து வருட ஆட்சிகாலத்தில் அவருக்கு குருநாகல் மல்லவப்பிட்டிய சதோசவில் பொருட்கள் வாங்கி பணம் செலுத்தவில்லை என்ற தேவையற்ற குற்றச்சாட்டில் கைது செய்தனர் அவ்வாறான ஒன்றாகவே இதுவும் இருக்கிறது.
இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மூன்று சம்பவங்களில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் உள்ளது.
முதலாவது இலங்கை மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட விசாரணைகளில் ரணிலின் பெயர் குறிப்பிடப்பட்டடுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்
அத்தோடு பட்டலந்த வதை முகாமில் மனித குலத்திற்கு எதிரான பாரிய வதைகள் கொலைகள் தொடர்பில் ஒரு தொகை ஆவணங்களில் ரணிலின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எவ்வளவு போராட்டம் நடத்தியும் அவரை இதுவரை அழைக்கவில்லை.
மேலும் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் போது அன்றிருந்த பிரதமர் என்ற வகையில் பொறுப்புக் கூற வேண்டும் என்பதில் விசாரணை நடைபெறும் தருணத்திலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை.
மாபெரும் பண மோசடி மற்றும் மனித படுகொலைகளில் சம்பந்தப்பட்டவரை ஒரு சிறு காரணத்திற்காக கைது செய்வது கேலிக் கூத்தாகும் என்றார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

காலை வெறும் வயிற்றில் இதில் ஏதாவது ஒன்றை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்பில் அதிசயத்தை உணரலாம் Manithan
