ரணிலின் கைதுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறைப்பாடு
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கவிந்த ஜயவர்தன மற்றும் மயந்த திசாநாயக்க ஆகியோரின் அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இன்று (23) ஐக்கிய நாடுகள் சபையில் எழுத்துப்பூர்வ முறைப்பாடு ஒன்றை குறித்த இருவரும் சமர்ப்பித்துள்ளனர்.
ஐ.நா அலுவலம்
தற்போதைய அரசாங்கம் அரசியல் அடக்குமுறையை செயல்படுத்துகிறது என்று கூறி செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையில் இந்த முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் நோக்கில், இன்று (23) கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு மேலும் பேசிய காவிந்த ஜெயவர்தன,
இந்த அரசாங்கம் மிகவும் ஜனநாயக விரோதமான முறையில் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அதற்கு சிறந்த உதாரணம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியல் நடவடிக்கை” என்றும் கூறியுள்ளார்.
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம் Cineulagam