வளைகுடா நாடுகளில் புதிய பாதுகாப்பு வியூகம்: உக்ரைன் - தென் கொரியாவுடன் கைகோர்க்கும் நாடுகள்
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல், அங்குள்ள நாடுகளின் நீண்டகால பாதுகாப்பு கொள்கைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரியமாகப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்கும் கத்தார், இம்முறை தானும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் பிற வல்லரசுகளின் தலையீட்டை எதிர்பார்க்கிறது.
மூலோபாயத் தேவை
"இது வளைகுடா நாடுகளின் மிக முக்கியமான மூலோபாயத் தேவையாக மாறியுள்ளது" என ஆசியக் குழுமத்தின் (Asia Group) நிர்வாக இயக்குனர் அகமது ஹெலால் தெரிவித்துள்ளார்.
தங்களது பாதுகாப்பிற்காக இனி ஒரு தனிப்பட்ட வல்லரசை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என்பதில் வளைகுடா நாடுகள் உறுதியாக உள்ளன.

அண்மையில் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி மேற்கொண்ட கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய பயணங்களின் போது, ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களை (Anti-drone technology) பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தென் கொரியாவின் ஏவுகணை
அதேபோல், அமெரிக்காவின் 'பேட்ரியாட்' (Patriot) பாதுகாப்பு அமைப்பிற்குப் பதிலாக, குறைந்த செலவிலான தென் கொரியாவின் ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பங்களை ஐக்கிய அரபு இராச்சியம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் வொஷிங்டன் போன்ற பாரம்பரிய பாதுகாப்புச் சார்புகளிலிருந்து விலகி, வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்புத் துறையைப் பன்முகப்படுத்தி வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு விவரம் இதோ Cineulagam