சுதந்திரக் கட்சிக்கு புதிய செயலாளர்: கட்சியின் மத்திய குழு தகவல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (11.09.2023) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக நேற்று மத்திய செயற்குழு கூடியிருந்தது.
பொதுச்செயலாளர் பதவி

தன்னைக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கும் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை இரத்துச் செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
அத்துடன், பதில் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்க அந்தப் பதவியில் செயற்படுவதற்கும் நீதிமன்றம் தடை பிறப்பித்திருந்தது.
இவ்வாறான நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam