நாடு முழுவதிலும் 25 புதிய சதொச விற்பனை நிலையங்கள் இன்று அங்குரார்ப்பணம்
நாடு முழுவதிலும் சுமார் 25 புதிய சதொச விற்பனை நிலையங்கள் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது. லங்கா சதொச நிறுவன வரலாற்றில் முதல் தடவையாக ஒரே நாளில் 25 விற்பனை நிலையங்கள் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.
சூரியவெவ, பதவிய, மூதூர், தமுத்தேகம, பெரலியகந்த, மின்னேரிய, பன்சல்கொடல்ல, மஹவ, தெல்தொட்ட, நாத்தன்டிய, ஹாரகம, தன்துரே, கரண்டுபான, பூண்டுலோயா, வெலிமட, வெல்லவாய, ரத்தினபுரி, அவிசாவெல்ல, வொக்ஷ்வல்வீதி, கொரலஇம, பின்கந்த, கலெய்கான, ஹபுகல மற்றும் ஹோமாகம ஆகிய நகரங்களில் புதிய விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவிப் பிரமாண தினம் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் என்பனவற்றை முன்னிட்டு இவ்வாறு விற்பனை நிலையங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.
வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தனவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த புதிய விற்பனை நிலையங்கள் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
