கடற்தொழிலாளர் இணைய நிர்வாகத்தினருக்கும் - அமைச்சருக்குமிடையில் கலந்துரையாடல்
வடமாகாண கடற்தொழிலாளர் இணைய நிர்வாகத்தினருக்கும்,கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும்(Ramalingam Chandrasekar) இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, நேற்றையதினம்(4) யாழ்(Jaffna) நாவாந்துறையில் நடைபெற்றுள்ளது.
கடற்றொழில் முறைகள்
இந்த கலந்துரையாடலில், இந்திய இழுவை மடி படகுகளின் வரத்து, சட்டவிரோத கடற்றொழில் முறைகள், சட்டவிரோத அட்டை பண்ணைகள் போன்ற முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடமராட்சி கடற்பகுதிகளில் சட்டவிரோத சுருக்குவலை,சட்டவிரோத அட்டை, மற்றும் உழவு இயந்திரங்களை பாவித்து கடற்றொழிலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரதி நிதிகளின் கருத்துக்களை செவிமடுத்த கடற்றொழில் அமைச்சர் தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் முக்கியமான சுருக்குவலை, உழவு இயந்திரம் கொண்டு கரவலை இழுத்தல் போன்ற கடற்றொழில் முறைகள் கட்டுக்குள் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் பிரான்சிஸ்,வடமாகாண கடற்தொழில் இணையத்தின் செயலாளர் மொகமட் ஆலம், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் உப தலைவர் அன்ரனி,வடமாகாண கடற்தொழில் இணையத்தின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் நடனேந்திரன், யாழ்மாவட்ட தலைவர் முரளிதரன்,நிர்வாக உறுப்பினர்கள்,என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |