சிங்கப்பூர் பேருந்து பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - விதிகளை மீறினால் ஆயிரக்கணக்கில் டொலர் அபராதம்
சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உரத்த குரலில் பாடல் கேட்பது உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோருக்கு நூற்றுக்கணக்கான டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பேருந்து இருக்கைகள் மீது கால்களை வைப்பது, ஸ்பீக்கரில் உரத்த சத்தத்துடன் பாடல் கேட்பது, உணவு உண்பது, பானங்கள் அருந்துவது மற்றும் குப்பைகளை வீசுவது போன்ற செயல்களுக்கு 500 சிங்கப்பூர் டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதேவேளை, பேருந்து மற்றும் முனையப் பகுதிகளை அழுக்குப்படுத்துவது, மற்ற பயணிகளுக்குத் தடையோ அல்லது ஆபத்தோ ஏற்படுத்துவது போன்ற கடுமையான குற்றங்களுக்கு 5,000 சிங்கப்பூர் டொலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், தரை வழிப்போக்குவரத்து சபையின் பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் மற்றும் முனைய ஊழியர்களுக்கு விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அதிகாரப்பூர்வ அபராத அறிவிப்புகளை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
பேருந்து சாரதிகளுக்கான விதிமுறைகள்
பேருந்து சாரதிகள் பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவர் என்றாலும், இடையூறு செய்பவர்களைப் பேருந்தை விட்டு இறக்குமாறு அறிவுறுத்தவோ அல்லது பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவோ அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

சிங்கப்பூர் தொடர்ந்து நிலையங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது பேருந்துப் போக்குவரத்துக்கும் விரிவாக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரைப் போன்று, போலந்தின் கிராகோவ் நகரம் மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட உலகளாவிய பல பகுதிகளில் பொதுப் போக்குவரத்தில் ஹெட்ஃபோன் பயன்படுத்தாமல் உரத்த சத்தம் எழுப்பி மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க நடவடிக்கை - விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டமூலத்தின் வர்த்தமானி வெளியீடு