இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் புதிய வழிகாட்டல் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, முழுமையாக கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் அனுமதியை பெறவேண்டியது அவசியம் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
என்ற போதும், அவர்கள் நாட்டை வந்தடையும்போது விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவிலிருந்து வருகை தரும் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டிற்கு வருகை தர அனுமதி வழங்கப்படுகின்றதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.
அத்துடன், முதலாவது PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின், வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.