வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக அறிமுகமாகும் திட்டம்
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பயனளிக்கும் வகையில் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மாரவில, வென்னப்புவ மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரமாண்டமான வீடுகளை சுற்றுலா வர்த்தகத்திற்காக பயன்படுத்துவதே இந்த திட்டமாகும்.
இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சியின் போது, அந்நாட்டு சுற்றுலா ஊக்குவிப்பு முகவர் நிலையங்கள் மற்றும் நாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்து மாரவில, வென்னப்பு ஆகிய இடங்களில் வீடுகள் வைத்திருப்பவர்க்ள குறித்து சிந்தித்து இந்த திட்டத்தை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் எனக்கும் அவ்வாறு ஒரு வீடு உள்ளது.
அதை நான் airbnbயின் வாடகைக்கு விடுகிறேன். அந்த வீடுகளை பதிவு செய்வோம். சுற்றுலா வாரியம் மற்றும் அவற்றை airbnb இல் பதிவு செய்யுங்கள், அதனால் வாடகைக்கு எடுப்பவர்களால் வீடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதற்கு ஒரு முறை உள்ளது.
அதனால் உங்கள் வீடுகள் பாதுகாப்பாக இருப்பதுடன், பெரிய அளவில் ஒரு தொகையை சம்பாதிக்கவும் முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.