நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை
நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை சபாநாயகர் நேற்று(21.11.2022) சபையில் அறிவித்தார்.
இதற்கமைய நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள வருடாந்த அறிக்கைகள் மற்றும் செயற்பாட்டு அறிக்கைகள் தற்போது மென் பிரதிகளில் சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
02.06.2022 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும் வகையில் குறித்த அறிக்கைகளை சபை மற்றும் நூலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கைகளின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்காக வைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.