புதிய காசா திட்டத்தால் இஸ்ரேல் பிரதமருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
புதிய காசா திட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், மறுத்தால் அமைச்சரவையில் இருந்து விலக இருப்பதாக அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் பிரதமருக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலில் போர் தொடர்பில் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெனி காண்ட்ஸ் (Benny Gantz) என்பவரே தற்போது பதவி விலக இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
தேச நலன்
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, ஒப்புக்கொள்ளப்பட்ட புதிய காசா திட்டத்தை பெஞ்சமின் நெதன்யாகு ஏற்க மறுத்தால், தமது கட்சி ஆதரவை கட்டாயம் திரும்பப்பெறும்.
போருக்குப் பிந்தைய காசா பிரதேசத்தின் நிர்வாகத்திற்கான திட்டம் ஜூன் 8 ஆம் திகதிக்குள் ஒருங்கிணைக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாவிட்டால், அவரது எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகும்.

ஒரு தசாப்தத்திற்கு முந்தைய நெதன்யாகு சரியானதைச் செய்திருப்பார். இன்று நீங்கள் சரியான மற்றும் தேச நலனுக்கான காரியத்தைச் செய்ய தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இவர் வெளியேற நேர்ந்தால், கடும்போக்கு அரசியல்வாதிகளால் பிரதமர் நெதன்யாகு உரிய முடிவை எடுக்க முடியாமல் போகும் என்ற அச்சமும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri