முட்டை ஒன்றின் புதிய விலை! எட்டப்பட்டுள்ள தீர்மானம்
ஒரு முட்டையை ஐம்பது ரூபாய் சில்லறை விலையில் விற்க முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
வர்த்தக அமைச்சருடன் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
வெள்ளை முட்டை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை 45 ரூபாவாகவும், முட்டைக்கு அதிகபட்ட சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
முட்டை உற்பத்தியாளர்களுக்கு இலாபம்
இது குறித்து தெரிவித்த வர்த்தக அமைச்சர், முட்டை உற்பத்தி செலவை விட உற்பத்தியாளருக்கு 5 ரூபாய் லாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், கால்நடைத் தீவனம் விலை உயர்ந்து வரும் நிலையில், அந்த விலைக்கு முட்டையை விற்க முடியாது எனக் கூறி, முட்டை உற்பத்தியாளர்கள் அந்த விலைக்கு உடன்படவில்லை.
இதன்படி முட்டை உற்பத்தியாளர் சங்கம் அண்மையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தியது.
எனினும் இன்றைய கலந்துரையாடலின் பின்னர் சந்தையில் ஒரு முட்டையை 50 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
முட்டையின் விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டதையடுத்து, சந்தையில் முட்டையின் வரத்து குறைந்துள்ளதாகவும் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.