சி.வி.கே சிவஞானத்திற்கு மீண்டும் புதிய பதவி!
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனமானது இன்று(26.10.2023) இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டு திட்டங்கள் தொடர்பிலும் இந்த கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஆராய்வு அறிக்கை
மேலும், திட்டங்களுக்கான காணிகளை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி வழங்குமாறு நிறுவனத்தின் பணிப்பாளரால் கோரிக்கை விடுக்கப்பட்ட போது, காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அவர்களினால், எட்டு திட்டங்கள் தொடர்பில் அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளர் மற்றும் குறித்த பிரதேச செயலர்கள் அடங்கிய குழுவினரால் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
