ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி சஜித் தலைமையில் புதிய கூட்டணி
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவிப்பு ஆகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்பட்டு, பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ''நாட்டைச் சூறையாடிய குழுவுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க மாட்டார்கள்.
தற்பெருமை மட்டுமே கொண்ட, அனுபவமில்லாத கூட்டத்திற்கான அரசாங்கமாக புதிய அரசாங்கம் அமையாது என்பதை மக்கள் வாக்குகளின் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
கொழும்பில் மாநாட்டு
கொழும்பில் பெரும் மாநாட்டை நடத்தி இந்த அறிவிப்பை வெளியிட ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.
மேலும், சஜித் பிரேமதாச 1994ஆம் ஆண்டுக்கு பிறகு மக்களுக்கு சேவை செய்யவந்த சிறந்த தலைவர். அவர் தனது குடும்பத்தை காப்பாற்றவோ அல்லது தனது நண்பர்களுக்கு சலுகைகளை வழங்கவோ பணியாற்ற மாட்டார்." என்றார்.
இந்நிலையில் உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியை தலைமைத்துவமாக கொண்ட அரசியல் கூட்டணி தொடர்பில் கொழும்பில் பெரும் மாநாட்டை நடத்தி அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பரந்துபட்ட அரசியல் கூட்டணி
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவமாக கொண்டு பரந்துபட்ட அரசியல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் முடிவுற்றுள்ளது என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளடங்கலாக இந்த எதிர்க்கட்சியின் கூட்டணி அமையப்பெற்றுள்ளது எனவும் விளக்கமளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
