சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட திட்டம் தற்போது நடைமுறையில்: மனுஷ
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டமான 'மனுசவி' இந்த வாரம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஓய்வூதிய வாழ்க்கையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மனுசவி திட்டம் அமைந்துள்ளது.
15 வருடங்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட திட்டம்

நீண்ட காலமாக, இலங்கையின், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சேவைகள் பாராட்டப்பட வேண்டிய அளவிற்கு இருக்கவில்லை.
சுமார் 10-15 வருடங்களுக்கு முன்னர் முதன்முதலில் முன்மொழியப்பட்ட இத்திட்டம்
இறுதியாக தற்போதே நடைமுறைக்கு வந்துள்ளது.
இதேவேளை இந்த திட்டத்தின்படி, 18 முதல் 59 வயதுக்குட்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதிக்கு பங்களிப்பு செய்ய தகுதியுடையவர்களாவர்.”என கூறியுள்ளார்.
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri