வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாக “மனுசவி’ எனும் திட்டத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய திட்டம்
இத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நீண்டகால அபிலாஷையை நிறைவேற்றும் வகையில் ‘மனுசவி’ ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
ஓய்வூதிய திட்டம்
வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் ஓய்வுக்கால வாழ்க்கையை வலுப்படுத்தும் வகையில் “மனுசவி” சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியின் உயிரையும் பாதுகாக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்தார்.


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 17 மணி நேரம் முன்

கனடாவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தி... News Lankasri

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் News Lankasri

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri
