புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் விபரம்!
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பது தொடர்பில் உள்ளக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
புதிய ஜனநாயக முன்னணி சார்பில் நடைபெற்று முடிந்த பொது தேர்தலில், தெரிவுசெய்யப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மொத்தமான 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள்(இரண்டு பேர் தேசிய பட்டியலிலிருந்து) நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.
நாடாளுமன்ற குழு
இதன்படி கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் புதிய ஜனநாயக முன்னணி பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேசிய பட்டியலிலிருந்து நியமிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் தீர்மானிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
