உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
பறவை காய்ச்சல் மனிதர்களைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அருகாமையில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு தொற்றும் இந்த பறவை காய்ச்சல் தொடர்பில் கடுமையான எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ளது.
பறவைகளில் இருந்து பாலூட்டும் விலங்குகளுக்கு தொற்று பரவியுள்ள நிலையிலேயே உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதுவரை பறவை காய்ச்சல் பறவைகளில் மட்டும் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது நீர்நாய்கள், நரிகள் மற்றும் மிங்க் ஆகியவற்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளுக்கான அறிவுறுத்தல்
இதனால், மனிதர்களைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அருகாமையில் இருப்பதாக கூறி, நடவடிக்கை எடுக்க உலக சுகாதார அமைப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்க நாடுகள் தயாராக வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கேட்டுகொண்டுள்ளது.
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றாலும், இந்த விவகாரத்தில் நாடுகள் மெத்தனமாக செயல்பட வேண்டாம் எனவும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
