பேருந்து கட்டணம் தொடர்பான புதிய அறிவிப்பு
12 காரணிகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நான்கு சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் காரணமாக தேசிய பேருந்து கட்டண கொள்கைக்கு புறம்பாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
காரணிகள்
டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்களின் விலை 10.24 சதவீதத்தால் அதிகரிப்பு என்பன உட்பட கடந்த ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்ரல் மாதத்தில் 10.24 சதவீதத்தால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் பேருந்து கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
முறைகேடுகள்
இதேவேளை, அனைத்து பேருந்துகளிலும் புதிய பேருந்து கட்டணத்தை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து கட்டணங்கள் தொடர்பான முறைகேடுகளை நடமாடும் ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்வும் வழிகாட்டுதல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.