சபாநாயகரை சந்தித்த கடற்படைத் தளபதி
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பானகொட, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை (Jagath Wickramaratne) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (16) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாடாளுமன்றத்திற்குள் உள்ள சில பகுதிகளைப் புதுப்பிப்பதற்கு இலங்கை கடற்படையிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடற்படையின் பங்களிப்பு
இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்கு இலங்கை கடற்படையின் நிபுணத்துவத்தையும் ஆதரவையும் வழங்க விரும்புவதாக வைஸ் அட்மிரல் பானகொட தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியில் இலங்கை கடற்படை ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை சபாநாயகர் பாராட்டியதுடன், நாடாளுமன்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கடற்படை காட்டிய ஆர்வத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வினைத்திறனான மற்றும் செலவு குறைந்த திட்டங்களின் நடைமுறையை உறுதி செய்வதற்கு அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கலந்துரையடலில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |