மியன்மார் அகதிகள் விவகாரம்: மட்டக்களப்பு பள்ளிவாசலுக்கு முன்னால் போராட்டம்
மியன்மார் (Myanmar) ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரி மட்டக்களப்பில் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (17) மட்டக்களப்பு - ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு (Batticaloa) விவசாய சம்மேளனம், ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் இந்த அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து பள்ளிவாசலுக்கு முன்னாள் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்திருந்தது.
மியன்மார் அகதிகள்
இதனையடுத்து, இன்று பகல் 1 மணிக்கு தொழுகையின் பின்னர் அங்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம், விவசாய சம்மேளன தலைவர் சுந்தரேசன் உட்பட பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ரோஹிங்கிய அகதிகளை துன்புறுத்தும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பாதே, இலங்கை அரசே சர்வதேச சட்டங்களை நடைமுறைபடுத்து, யு.என்.எச்.சி.ஆர். அப்பாவி மியன்மார் அகதிகளை பெறுப்பெடுத்து புகலிடம் கொடுக்கும் நாடுகளுக்கு பாரப்படுத்து, மியன்மாரில் மேலும் ஒரு இலட்சம் அகதிகள் படையெடுப்பார்கள் என்ற பீதியை கிளப்பாதே, போன்ற பல வாசகங்கள் ஏந்தியவாறு ஒரு மணித்தியாலம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan