கிண்ணியா திண்மக்கழிவு அகற்றல் தொடர்பில் புதிய பொறிமுறை
திண்மக் கழிவகற்றலில் ஏற்படும் பிரச்சினைகள், இயந்திர கோளாறுகள், ஊழியர்களின் விடுமுறைகள் தொடர்பிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
இன்று(16) கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி திண்மக்கழிவு அகற்றல் முகாமைத்துவ நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அவதானிப்புகளை மேற்கொண்டார்.
பின்னர் ஊழியர்களுடன் கலந்தாலோசனை செய்த தவிசாளர் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்கள் கோளாறுகளை நிவர்த்திக்கும் வகையில் புதிய குழு ஒன்றையும் நிறுவியதுடன் அவ்வாறான நடவடிக்கைகளின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பிலும் விரிவாக விளக்கினார்.
புதிய குழு
இது தவிர பொது சுகாதார பரிசோதகர் ஒருவரும், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரும், வேலை மேற்பார்வையாளர் ஒருவரும் இதற்காக நியமிக்கப்பட்டிருப்பதுடன் சில வேலைகளில் ஏற்படும் அசாதாரண நிலைமைகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு குறித்த குழுவினரை தொடர்பு கொண்டு விடயங்களை பகிர்ந்து ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் போது வாகனம் திருத்தும் இடத்தில் உள்ள வாகனங்களை அவசரமாக திருத்துவதற்கும் பணிப்புரை வழங்கினார்.
இதில் நகர சபை உறுப்பினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகரின் மனைவி.. விஜய் டிவி சீரியல் நாயகியா? Cineulagam
