முடங்கியிருந்த பேலியகொடை மெனிங் சந்தையின் இன்றைய நிலவரம்
பேலியகொடை மெனிங் சந்தை நேற்றைய தினம் முற்றாக முடங்கியிருந்த நிலையில் இன்று வழமைப்போல் செயற்பட்டு வருகிறது.
மெனிங் சந்தையில் இன்று காலை முதல் வழமையான சந்தை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெனிங் சந்தையில் உள்ள விற்பனை நிலையங்கள் வெளியாட்களுக்கு வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தி நேற்றைய தினம் மெனிங் சந்தை தொழிற்சங்கத்தால், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிப்பு
இதனால் சந்தை செயற்பாடுகள் நேற்று முற்றிலும் முடங்கியிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த போதும் வியாபாரிகள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்காரணமாக வியாபார சம்மேளனத்தின் தலைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, நேற்றிரவு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
