வேலணை வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு
வேலணை வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம், தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த கூட்டமானது, நேற்று(19.01.2026) வர்த்தக சங்கத்தின் கூட்டம் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக நிர்வாக தெரிவின்றி செயற்பாட்டு முடக்கத்துடன் காணப்பட்டு வந்த குறித்த வர்த்தக சங்கத்தால் நகர்ப்பகுதி வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகம் தெரிவு
இந்நிலையில், குறித்த விடயம் பிரதேச சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட போதே அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நேற்று வர்த்தகர்கள் அழைக்கப்பட்டு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கடந்தகால இழுபறிகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை சீர்செய்யும் பொறிமுறைகள் பல பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வர்த்தகர் புலேந்திராசா பாலசிறிதரன் தலைமையிலான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
இதேவேளை, நிர்வாகத்தின் தலைவராக புலேந்திராசா பாலசிறிதரன், செயலாளராக சண்முகராசா சவீதன், பொருளாளராக புலேந்திரன் கஜன் உப தலைவராக கந்தசாமி சிவகுமார், உப செயலாளராக கந்தசாமி கணேசராசாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், நிர்வாக உறுப்பினர்களாக நாகதீபன், பிரதீபன், ஜீவராஜ், வசீகயன் பாஸ்கரன், தனுசன் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

