வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகக் குழு தெரிவு
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்சபை கூட்டத்தில் சங்கத்திற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பொதுச்சபை கூட்டமானது இன்று(13.03.2024) வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
முக்கியஸ்தர்களின் வழிகாட்டல்
இதன்போது புதிய தலைவியாக சிவானந்தன் ஜெனிற்றா தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, செயலாளராக துரைசிங்கம் கலாவதி, பொருளாளராக சர்வேஸ்வரன் கலாராணி, உபதலைவராக பேரின்பராசா பாலேஸ்வரி, உபசெயலாளராக பத்மநாதன் சோதிமலர் ஆகியோரும் 11 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிர்வாகத்தெரிவானது வவுனியா மாவட்டத்தின் பொது அமைப்புக்களான தனியார் பேருந்து உரிமையாளர்சங்கம், முச்சக்கவண்டி உரிமையாளர்சங்கம், தமிழ்விருட்சம் சமூகஆர்வலர் அமைப்பு, ஜனனம் அமைப்பு ஆகியவற்றின் முக்கியஸ்தர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan